ஜீவஜோதி சட்டப் போராட்டத்தை படமாக்கும் ஞானவேல்

சாதாரண நிலையில் இருந்து உணவக தொழிலில் சாதனையாளராக உயர்ந்தவர் சரவணபவன் அண்ணாச்சி என்று அழைக்கப்பட்ட ராஜகோபால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஓட்டல் தொழிலில் தனி நபராக உலகம் முழுவதும் கிளைகளை தொடங்கி நடத்தியவர் தீவிரமான முருகபக்தரான ராஜகோபால் ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர் தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த
 ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால், தொழிலில்மேலும் பல உயரத்தை அடையாலாம் என ஜோதிடர் ஒருவர் கூறியதால் ராஜகோபால் 3-வது முறையாக ஜீவஜோதியை திருமணம் செய்ய திட்டமிட்டார்இதற்காக ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை, ராஜகோபால் கடத்தி, கொலை செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜகோபால் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை18-ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.சாந்தகுமார் கொலை வழக்கு நீதிமன்ற விசாரணை தமிழக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு நிகரான சம்பவங்கள்
நிறைந்த வழக்கு
ஜெய் பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல், ஹோட்டல்சரவண பவன் உரிமையாளர்  ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்ட புதிய படம் ஒன்றை இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது
நடிகர் சூர்யா நடிப்பில் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கியிருந்தார்.நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது படத்தின் பெரும் பகுதி காட்சிகள் நீதிமன்றத்தில் நடைபெறும் வாத பிரதிவாதங்களாகவே இருக்கும்
இப்படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் அடுத்து மீண்டும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். மறைந்த சரவண பவன் ராஜகோபால் – ஜீவ ஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ‘தோசா கிங்’ என்ற பெயரில் இந்தியில் உருவாகும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது
 இது தொடர்பாக ஞானவேல் கூறியிருப்பதாவது
நான் பத்திரிகையாளராக இருந்த நாட்களில் இந்த வழக்கைப் பின்பற்றி இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன். திரையில் ஜீவஜோதியின் சட்டப் போராட்டம் மூலம் புதிய பரிமாணங்களை வெளிக்கொண்டுவருவேன் என நம்புகிறேன். சமகால இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான சில படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற ஜங்கிலி பிக்சர்ஸுடன் இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.