ஜென்டில் வுமன் முதல் பார்வை வெளியானது

அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கும்படம் ஜென்டில் வுமன் . கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ராஸ், காலா, நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இதில் நடித்துள்ளார்.

படக்குழு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, “ஆண்களுக்கு மட்டும்தான் ஜென்டில் என்று சொல்ல வேண்டுமா? வலிமை, பொலிவினை புது அர்த்தம் தெரிவிக்க ஜெண்டில்வுமன் வந்திருக்கிறாள்” என படக்குழு குறிப்பிட்டுள்ளது.