ஜெயலலிதா கருத்தை வழிமொழிந்த சிவாஜி ரகசியம் உடைத்த கமல்ஹாசன்

பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 6 அன்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசுகிற போது

நான் புத்தகம் நிறைய படிப்பேன். ஆனா300 பக்கங்களுக்கு மேல் இருந்தால் படிக்கவே மாட்டேன். எல்லாரும் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை படித்தீர்களா என்று கேட்டார்கள். நிறைய பக்கம் இருந்தால் படிக்க மாட்டேன். ‘பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும்?’ என பத்திரிகையாளர்ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு, ‘ரஜினிகாந்த்’ என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார் ஜெயலலிதா அவர்கள். ‘அடடா’ன்னு எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்றுதான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன்.இந்தப் படத்தை முன்பே மணி பிளான் பண்ணும்போது, நான் இந்த பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டேன். அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. “இதில் நீங்க நடிச்சீங்ன்னா… உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா? உங்களை இந்த மாதிரி யூஸ் பண்ண நான் விரும்பவில்லை” என்றார்.வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அதுதான் மணிரத்னம். பழுவேட்டரையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, சிறிய பழுவேட்டரையராக சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும்போது எனக்கு தோன்றியது.பொன்னியின் செல்வனில் 40-வது அத்தியாயத்தில்தான் அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்தப் படத்தில் அவரின் அறிமுகக் காட்சியை மணிரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்” என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார் ஜெயலலிதா மட்டுமல்ல வந்தியதேவன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகன் ரஜினிகாந்த் என சிவாஜி கணேஷன் கூறிய ரகசியத்தை விழாவில்கமல்ஹாசன் பேசும்போது கூறினார் 

“எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணிரத்னம் பற்றி சொல்ல நிறைய உள்ளது.

ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கோம். அது மாதிரிதான் இந்த படமும்.இது ஒரு சிறிய குடும்பம். இதில் யாருக்கும், யார் மீதும் பொறாமைப்பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர்கள்  நானும், ரஜினியும்
‘பொன்னியின் செல்வன்’ கதை உரிமையை ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் வாங்கி வைத்திருந்தார். நான் அப்படத்தின் உரிமையை அவரிடம் கேட்டபோது அதனை அவர் என்னிடம் கொடுத்தார். ஆனால், சீக்கிரம் எடுத்துவிடு” என்று கூறினார். அப்போது அது எனக்கு புரியவில்லை. ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை. அந்தக் கதை என் கையை விட்டு சென்ற வருத்தம் எனக்குள் இருந்தது.மீண்டும் ஒரு கட்டத்தில் இதைப் படமாக்க முனைந்தபோது, “வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வை” என சிவாஜி சொன்னார். அதைக் கேட்ட எனக்கு ஷாக்காக இருந்தது. ஏன்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜினின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டுவிட்டு.. “அப்ப எனக்கு என்ன கேரக்டர்”ன்னு கேட்டேன்? “நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய்” என்றார். அது அன்று நடக்காமல் போனது.இன்று ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம் ரவியும் நடிக்க கிடைத்துள்ளது. வெற்றியும் வரும் தோல்வியும் வரும். ஆனால், அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதயத் துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டபடியே வந்தேன்.இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ஒன்று மணிரத்னம் எடுப்பார். அல்லது நான் எடுப்பேன் என்று நினைத்தேன். மணிரத்னம் வைராக்கியமாக எடுத்துவிட்டார். நான் முயற்சி செய்தேன், ஆனால் மணிரத்னம் தொடர்ச்சியாக முயன்று வென்றிருக்கிறார்.
மணிரத்னத்தின் வெற்றிப் பட்டியல்களில் மிக முக்கிய வெற்றிப் படமாக இது இருக்கும். இதனை நான் மேடை அலங்காரத்துக்காக சொல்லவில்லை” என்று கமல்ஹாசன் பேசினார்.