மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்நடிக்கவுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வழக்கம்போல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் அறிமுகம் செய்யும் அவர்களது புதிய படங்களுக்கான அறிவிப்பு போன்றே ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோவும் வெளிவந்துள்ளது.
பின்னர், இருவரையும் பார்த்து சைகையில் ஏதோ கேட்டுவிட்டு வெளியே செல்ல, அந்த இடத்தில் ரஜினிகாந்த் வீசிவிட்டுச் செல்லும் கையெறி குண்டால் புகைமண்டலமாகிறது அந்த அறை.
தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள். ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.