2024ம் ஆண்டின் கடைசி மாதத்தின் இரண்டாவது வாரம் முடியப் போகிறது. கடந்த வாரம் டிசம்பர் 6ம் தேதி நான்கு படங்கள் மட்டுமே வெளியாகின. ஆனால், இந்த வாரம் டிசம்பர் 13 ஆம் தேதி அதிகப்படங்கள் வெளியாகிறது.
அன்றைய தினத்தில், “2கே லவ் ஸ்டோரி, மிஸ் யு, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், அந்த நாள், மௌனமே காதலாய், விடிஞ்சா எனக்கு கல்யாணம், மழையில் நனைகிறேன், தென் சென்னை, சூது கவ்வும் 2,” ஆகிய 9 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் இந்த வருடம் வெளியாகிய படங்களின் எண்ணிக்கை 220ஐக் கடக்கும். கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் 240க்கும் அதிகமான படங்கள் வெளியாகுமா என்பதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
Next Post