விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரி, வில்லன் பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் பகை. அதனால் என்ன நடக்கிறது? என்பதோடு நடுவில் விஜய்சேதுபதிக்கும் நாயகி அனுகீர்த்திவாஸுக்கும் காதல். அக்காதலில் திடீர் வில்லனாக வருகிறார் நடிகர் விமல்.அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் சொல்லியிருக்கும் படம் டி.எஸ்.பி திண்டுக்கல்லில் பூக்கடை நடத்தும் இளவரசுவின் மகனாக ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி,நாயகியைத் திடீரெனச் சந்திப்பது அதன்பின் நடக்கும்காட்சிகளில் அவரை மிரட்டிக்கொண்டே சுற்றுவது எனஎல்லா இடங்களிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்திருக்கிறார் விஜய்சேதுபதி.நாயகியாக அறிமுகமாகியிருக்கும் அனுகீர்த்திவாஸ் சில இடங்களில் மட்டும் நன்றாக இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகர், வழக்கமான வில்லனாகவே வந்திருக்கிறார்.புகழ், சிங்கம்புலி, தீபா உள்ளிட்டோர் நகைச்சுவை செய்ய முயன்றிருக்கிறார்கள்.இளவரசு, ஆதிராபாண்டிலட்சுமி,கு.ஞானசம்பந்தம் ஆகியோர் தங்கள் நடிப்பு அனுபவங்களால் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு வலுச்சேர்த்திருக்கிறார்கள்.முரட்டுமீசையுடன் நட்புநாயகனாக வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் விமல். இமானின் இசையில் நல்லா இரும்மா பாடல் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.எந்த வேடமானாலும் அதைச் சிறப்பாகச் செய்யும் நாயகன் உட்பட நல்ல நடிகர்கள் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகிய பலங்கள் இருந்தும் அரதப்பழசான கதை, அதற்கும் பழசான திரைக்கதை, சுவாரசியமற்ற காட்சிகள் என எல்லாவற்றிலும் சொதப்பி படத்தைக் கெடுத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
Sign in