தேவர் மகன், சண்டியர் படங்களுக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட சர்ச்சை, விஸ்வரூபம் படத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு ஆகியவற்றை நடிகராகவும், தயாரிப்பாளராகவும் எதிர்கொண்டார் கமல்ஹாசன் நாயகன், பம்பாய் படங்கள் மூலம் தாதாக்கள், அரசியல்வாதிகள் எதிர்ப்பை எதிர்கொண்டவர் மணிரத்னம் .
இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது.
தக் என்பதை உலகிற்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். வட இந்தியாவில் புழக்கத்தில் இருந்ததாக என்ற சொல் ‘பின்விளைவை நினைத்துப் பார்க்காத, துணிவான, மோசடிக்காரன்’ என குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவை1800-களில் ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்த தொடங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆங்கில மொழியில் ‘தக் என்கிற’ வார்த்தை நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தியாவை ஆக்கிரமிக்க தொடங்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகாரத்தையும், அடக்குமுறைகளையும் அமுல்படுத்த தொடங்கிய ஆங்கிலேய அரசு சந்தித்த எதிர்விளைவுகளின் கதாநாயகர்களாக ‘தக்’ மனிதர்கள் தங்கள் வீரத்தை காட்டியுள்ளனர்.
கொள்ளை அடிப்பது அதற்கு தடையாக இருப்பவர்களைகொலை செய்வதை தங்கள் தொழிலாக கொண்டவர்கள், அதனை அவர்களது வாரிசுகள் பிற்காலத்தில் பரம்பரை தொழில்முறையாகவே கொண்டவர்களின் வாழ்கை,
‘தக்’ என்று ஆங்கிலேயர்கள் பதிவு செய்திருக்கும் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.
‘இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆஃப் தி ஹிஸ்டரி அண்ட் பிராக்டிஸஸ் ஆஃப் தக்ஸ்’ Illustrations of the history and practices of the Thugs, (1837) என்ற நூலில் “இந்தியாவில் ஏராளமான பரம்பரை தொழில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றில் கொள்ளை, கொலை செய்வது’தக்’குகளின் தொழில் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘தக்’குகள், அழித்தொழிப்பின் தெய்வமான காளியை வணங்குபவர்கள் என்பதும், ‘பிறவி குற்றவாளிகள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.
‘தக்’குகளின் கொள்ளை,கொலை வழக்கம் ஆங்கிலேயர்களை திகைப்பில் ஆழ்த்தியது. ‘இந்த கூட்டத்தை வேருடன் ஒழிக்கவேண்டும். இல்லையேல் இந்தியாவில் ‘ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை தொடரமுடியாது’ என 1830-ல் இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பப்பபட்டதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
‘கூண்டோடு இவர்களை அழிக்கும்’ வேலையை முன்னின்று செய்தவர்கள், இந்தியாவின் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் ‘லார்ட் வில்லியம் பெண்டின்க்’ மற்றும் ‘கேப்டன் வில்லியம் ஸ்லீமன்’ ஆகியோர்தான்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் சக்திவேல், வேலு நாயக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. கதைகளம் இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் பயணிக்க போகிறதா என்பதை படம் வெளியாகும் போதுதான் தெரியவரும்