இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பெயர் அறிவிப்பு கடந்த வருடம் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுது.படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் கமல்ஹாசன் நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டுமே முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ளன என்றும் ஒரு பாடல் உட்பட பல காட்சிகளின் படப்பிடிப்பு நடக்க வேண்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளான நேற்றுபடத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இப்படம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் இறுதிக்குள் வெளியாகும் என்கிற முந்தைய அறிவிப்பையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் நாளில் இப்படம் வெளியாகும் என்று ஊடகங்கள் வெளியிட்டு வந்த செய்திகள் பொய்யாக்கியுள்ளது
இயக்குநர் மணிரத்னத்தைப் பொறுத்தவரை திட்டமிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பை முடிப்பவர். அதற்குப் பிறகான பணிகளையும் திட்டமிட்டு சரியாகச் செய்துவிடக்கூடியவர்.
அப்படி இருக்கும்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்படும் இப்படத்தின் வெளியீட்டை ஏழு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது ஏன்? அதுவும் கோடை விடுமுறையையும் பயன்படுத்தாமல் அதற்கும் தள்ளிப் போவது ஏன் எனவிசாரித்தால்..
இப்படத்தில் வி எஃப் எக்ஸ்காட்சிகள் நிறைய இடம்பெறவிருக்கிறதாம்.
இன்னொன்று,கோடை விடுமுறையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம் ஏப்ரல் மாதத்திலும், அதைத் தொடர்ந்து அஜீத்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் மே மாதத்திலும் வெளியாகவிருக்கின்றன என்பதால் ஜூன் மாதம் 5 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.