தனுஷ்க்கு தற்காலிக தளர்வு

தனுஷ் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்க போவதாக 2017 ஆம் ஆண்டுதேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக இருந்த பெயரிடப்படாத இந்தப் படம் தனுஷ் நடிக்கும் 37வது படம் என அப்போது கூறப்பட்டது. தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்திருந்தப.பாண்டி படம் ஏப்ரல் மாதம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த சூழ்நிலையில் தானே படத்தை இயக்குவதாக தனுஷ் கூறியதன் அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இருந்து விலகி கொள்ள எளிமையான தொடக்க நிகழ்வுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த சூழலில் உடனடியாக மீண்டு வர முடியாத நிதி நெருக்கடிக்கு உள்ளானது தேனாண்டாள் பிலிம்ஸ். படப்பிடிப்பு தொடர முடியாத சூழலில் வெவ்வேறு படங்களில் நடிக்க தொடங்கிய தனுஷ் கடந்த ஏழு வருடங்களில் 14 படங்களில் நடித்து முடித்து விட்டார். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர தனுஷ் சை அணுகியபோது பொறுங்கள் அழைக்கிறேன் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மீண்டும் தனுஷ் சை தயாரிப்பாளர் முரளி ராமசாமி தொடர்பு கொண்ட போதும் காத்திருங்கள் என்கிற பதில் மட்டுமே கிடைத்தது. இந்த இடைப்பட்ட வருடங்களில் தனுஷ் நடிக்கும் படத்தின் வியாபார மதிப்பு கூடியிருந்தது துடன் அவரது சம்பளமும் அதிகரித்திருந்தது. ஒரு கட்டத்தில் 80% ம் முடிந்துவிட்ட படத்தை முடித்து தர விருப்பம் இல்லை என்றால் புதிதாக படத்தை தயாரிக்க கால்ஷீட் கொடுங்கள் கதை, இயக்குநர் என அனைத்தையும் நீங்களே தீர்மானியுங்கள் என தனுஷ் அவர்களிடம் முரளிராமசாமி கோரிக்கை வைத்த போதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதன்பின்னரே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளிராமசாமி நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தை கூட்டியுள்ளார். தனது கையறு நிலைமையை கூறிய முரளி ராமசாமி, சங்கத்தின் கௌரவ செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தனுஷ் தனது நிறுவனத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அவருக்கும் என் போன்றே பதில் கூறி வருகிறார் என தெரிவித்தார். அதன் பின்னரே தனுஷ் நடிக்கும் அல்லது இயக்கும் படங்களுக்கு பெப்சி அமைப்பு வேலை செய்யக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆகாஷ் என்பவர் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றை தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார் அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்குமாறு ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர், அழுத்தம் கொடுத்தனர் ஆனால் எதற்கும் கூட்டுக் குழுவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் அசைந்து கொடுக்கவில்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். கூட்டுக்குழு முடிவிற்கு எந்தவொரு பதிலும் கூறாமல் மெளனம் காத்து வந்த நடிகர் தனுஷ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் ஏற்கனவே நான் ஒப்புக் கொண்ட திரைப்படம். அதற்கான படப்பிடிப்பு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறாமல் தாமதமானால் நஷ்டம் ஏற்படும். எனவே படப்பிடிப்பை நடத்துவதற்கு அனுமதி வழங்குங்கள். படத்தை முடித்து விட்டு எனது பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணலாம் என குறிப்பிட்டிருந்தார் என கூறப்படுகிறார். இக்கடிதம் சம்பந்தமாக நேற்று தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி அமைப்பின் பிரதிநிதிகள் கூடி விவாதித்தனர். மெளனம் காத்து வந்த தனுஷ் பிரச்சினைக்கு முடிவு காண பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதால்,சகதயாரிப்பாளர் நலம் கருதி ஆகாஷ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பை மட்டும்நடத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  தனுஷ் நடிக்கும் வேறு எந்வொரு படப்பிடிப்பை நடத்துவதற்கு அனுமதி இல்லை. என்பதுடன் முரளிராமசாமி, பைவ்ஸ்டார் கதிரேசன் இருவர் தயாரிக்கும் படங்களில் தனுஷ் நடிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்ககூட்டுக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பின் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு இணைந்து நட்சத்திர நடிகரை கட்டுப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.