தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்களின் வாரிசுகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றனர். இயக்குநர் கஸ்தூரி ராஜாவாரிசுகளான இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோரை தொடர்ந்து அவரது பேரன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகும். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை தனுஷ் இயக்குகிறார்.அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷின், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கிள் எப்படி?
உற்சாகம் கூட்டும் வெஸ்டர்ன், ரேப் கலந்த ஃபோக் பாடலாக கலர்புல்லாக காட்சிப்படுத்தபட்டிருக்கும் தமிழும், ஆங்கிலமும் கலந்த இப்பாடலில் ஆங்கில வார்த்தைகள் தான் அதிகமாக பயன்படுத்த பட்டிருக்கின்றன.
“கோல்டன் ஸ்பாரோ, என் நெஞ்சுல ஏரோ” என தொடங்கும் பாடலில் நடுவில் அறிவின் ‘ராப்’ கவனம் பெறுகிறது.
“நானே பொயட்டு, எங்க என் டூயட்டு”, “இறுக்கி பிடிக்கவா, இலக்கணம் படிக்கவா”, “நீ எக்ஸாமுல ஃபெயில் ஆனாலும் வெக்ஸ் ஆக மாட்டேன்” என வரிகள் எதுகை மோனையை மையப்படுத்தியே பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இவருடன் சுபலாஷினி, ஜி வி பிரகாஷ் குமார், தனுஷ் இணைந்து பாடியுள்ளனர்.
.