நடிகர் தனுஷ் தான் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.சுனில் நாரங், புஸ்கர் ராம் மோகன்ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு, மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு ‘குபேரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
Prev Post