டான் கிரியேசன்ஸ் எல். கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா உருவாக்கத்தில் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் இன்று (20.10.2024) படபூஜையுடன் துவங்கியது.
விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் துவங்கியிருக்கிறார்கள்.
வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார்
கிராமத்துக்கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
சஸ்பென்ஸ், மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா.
விழாவில் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் cs,
கலை இயக்குனர் பாப்ப நாடு C . உதயகுமார். எடிட்டர் வெற்றிகிருஷ்ணன்,மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
“சமீபநாட்களாக பலரும், தமிழ் அர்ச்சனை செய்யச் சொல்லி விரும்பி கேட்கிறார்கள். நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.