தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் வாரிசுகள் தொடர்ந்து நடிகர்களாக, இயக்குநர்களாக அறிமுகமாகி வருகின்றனர் இன்றைய சூழலில் தமிழ் சினிமாவின் பாக்ஸ்ஆபீஸ் வசூலின் 70% தீர்மானிக்ககூடியவர்களாக திரைக்கலைஞர்களின் வாரிசுகளான விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் போன்றவர்கள் உள்ளனர்இவர்கள் வரிசையில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹிட் லிஸ்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்தமிழ் சினிமாவின் புது வசந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன் தமிழ் சினிமாவில்  திரைக்கதையில் தனக்கென்று ஒரு பாணியை கதை சொல்வதில் கடைப்பிடித்தவர் எதிர்மறையான கதாபாத்திரங்களை கூட பாசிட்டிவாக திரையில் காட்டியவர் கொடூரமான வில்லனாக தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தப்பட்டு வந்த ஆனந்தராஜ்சை விஜயகாந்த் மூன்று வேடங்களில் நடித்து வெளியான வானத்தைப் போல படத்தில் நல்லவராக யோசிக்க வைத்தவர் இயக்குநர் விக்ரமன் இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் கே.எஸ்.ரவிக்குமார் தன் குருவுக்கு செய்யும் மரியாதையாகஇயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட் படத்தை தனது ஆர்.கே.செல்லுலாயிட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்குகிறார்கள்.இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை நிகழ்வு சென்னையில் நேற்று காலை நடைபெற்றது இதில் திரை பிரபலங்கள் R.B.சௌத்ரி, சத்யஜோதி தியாகராஜன், P.L.தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில்,  கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன்,  பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர்.கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா,  பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ்  உட்பட பலர் கலந்து கொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தினார்கள்.இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி, ஆக்சன், கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளது என்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்படம் குறித்த  மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது