தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு?

தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக இயக்குநர் கே.பாக்கியராஜ்  தெரிவித்துள்ளார்தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது மூத்த இயக்குநரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவர் பதவிக்கு பாக்யராஜை எதிர்த்து போட்டியிட்டார் நடந்து முடிந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைவராக வெற்றி பெற்றார் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேற்றுவாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் எழுத்தை அதிகம் ரசிப்பவன், என்னுடைய எழுத்தை அதிகம் மதிக்கும் அவர் உடனான நட்பு நீண்டகாலமாக இருந்தது.அதேபோல் கருணாநிதி, எம்.ஜி ஆர் ஆகிய இருவர் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான். தமிழ்த் திரையை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கருணாநிதி பெயர்.சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர், வெற்றிமாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர். தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான்.