கொரேனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2019-20-21 ஆகிய ஆண்டுகளில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. கடைசியாக 2019-ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து நேற்று மாலை
2020-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்றைக்கு அறிவிக்கப்பட்டன.
2020-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன.
இந்த தேசிய விருது பெற்ற படங்களின் பட்டியல் இன்றைக்கு புதுதில்லியில் வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியல் இது :
சிறந்த படம் – சூரரைப் போற்று
சிறந்த தமிழ்ப் படம் – சிவரஞ்சனியும் சில பெண்களும்
சிறந்த நடிகர்- சூர்யா (சூரரைப் போற்று), அஜய் தேவ்கன் (Tanhaji)
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
சிறந்த இயக்குநர் – இயக்குநர் சச்சிதானாந்தம் (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த அறிமுக இயக்குநர் – மடோன் அஸ்வின் (மண்டேலா)
சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன் (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த துணை நடிகை – லக்ஷ்மிபிரியா சந்திரமெளலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ் (சூரரைப் போற்று), தமன் (அலவை குந்தபுரம்- தெலுங்கு)
சிறந்த திரைக்கதை – சூரரைப் போற்று ( சுதா கொங்கரா & சாலினி உஷா நாயர் )
சிறந்த வசனம் – மடோன் அஸ்வின் ( மண்டேலா )
சிறந்த படத்தொகுப்பாளர் – ஸ்ரீகர் பிரசாத் (sreekar prasad) (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த பின்னணி இசைப் பாடகி – நஞ்சம்மா (ஐயப்பனும் கோஷியும்-மலையாளம்)
சிறந்த பின்னணி இசைப் பாடகர் – ராகுல் தேஸ்பண்டே
தேச ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது – மண்டேலா
சினிமாவிற்கு உகந்த மாநிலம்- மத்திய பிரதேசம்
இந்த விருதுப் பட்டியலின்படி தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு 2020-ம் ஆண்டில் 10 விருதுகள் கிடைத்துள்ளன. இது நிச்சயமாக சாதனையான ஒன்றுதான்..!