தளபதி-64ல் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை, முதன் முறையாக இணையும் கூட்டணி?

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் முடிந்து இவர் இளம் இயக்குனர் லோகேஷுடன் கைக்கோர்க்கவுள்ளார், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், இதில் பிரபல நடிகை ராகுல் ப்ரீத்சிங் பெயரும் அடிப்படுகின்றதாம்.

அப்படி இவர் நடித்தால் விஜய்-ராகுல் ப்ரீத்சிங் முதன் முறையாக இணையும் படமாக இருக்கும்.