திரைப்படமாகும் பெருமாள்முருகனின் கோடித் துணி சிறுகதை

பெருமாள்முருகன் சர்வதேச அளவில்

 கவனம் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்லூரி
 பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர் என
 பன்முகம் கொண்டவர் இவர் எழுதிய
 “மாதொருபாகன், பூனாச்சி, ஒரு
 வெள்ளாட்டின் கதை” ஆகிய நூல்கள்
ஆங்கிலத்தில்
 மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
சாகித்ய அகடாமி விருது பெற்றுள்ள
பெருமாள்முருகன் எழுதியுள்ள நூல்கள்
அமெரிக்காவின் உயரிய விருதாக
 எழுத்தாளர்களால் மதிக்கப்படும்
தேசிய புத்தக விருதுக்கான பட்டியலிலும்
இடம்பெற்றன. தெலுங்கு, மராத்தி,
 கன்னடம்ஆங்கிலம் மட்டுமல்லாது
ஜெர்மன், பிரெஞ்சு, போலிஷ், செக்
 மொழிகளிலும் இவரது நாவல்கள்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன தற்போது
 இவரது சிறுகதை ஒன்று தமிழில்
 திரைப்படமாக்கபடுவதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம்
 மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய்
 சாமுவேல் இருவரும் இணைந்து
என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும்
 புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன்
 என்பவர் இயக்க உள்ளார்.
புகழ்பெற்ற தமிழாசிரியரும்
 எழுத்தாளருமான பெருமாள் முருகனின்
 ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையின்
 புதிய விளக்கமாக இந்த படம்
 தயாராகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில்
 ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல்
 இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும்
 பணியாற்றுகிறார்,
இந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள்
 பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட
 நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்த
 படத்தின் படப்பிடிப்பு துவங்க
 இருக்கிறது..
படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற
தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள்
 விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.
தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே
 எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை
 கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி
 அடைவதாக படத்தின் தயாரிப்பாளர்கள்
 கூறியுள்ளனர்.