தொடர் கொலைகள் செய்யும் மன்நோயாளியைத் கண்டுபிடிக்கும் ஒருவரிக் கதைதான் “திஸ்மைல் மேன்”.கொலையாளியைக் கண்டுபிடிக்கும் அதிகாரிக்கு அல்சைமர் எனும் அரிதானஞாபகமறதி நோய் இருக்கிறது.அந்தப் பாதிப்பு இருக்கும்போதே துப்பறிகிறார் என்று சொல்லியிருப்பதன் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது தி ஸ்மைல் மேன் திரைப்படம்.
வரவேற்புப் பெற்றிருக்கிறார்.
சரத்குமாரின் குழுவில் பணியாற்றும் காவலதிகாரிகளாக சிஜா ரோஸ், ஸ்ரீகுமார் ஆகியோரும் தங்கள் வேடத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
குறைவான காட்சிகளில்இனியா, சுரேஷ் மேனன், நட்ராஜன், ராஜ்குமார், மலைராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன்,சரத்குமாரையே ரசித்துப் படமாக்கியிருக்கிறார் போலும்.அவர் ஒவ்வொரு தோற்றத்திலும் கவர்கிறார்.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ்,இதுபோன்ற கதைகளுக்கு இசை முக்கியம் என்றறிந்து இசையமைத்திருக்கிறார்
படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
கமலா அல்கெமிஸ் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்கள் ஷ்யாம் – பிரவீன் ஆகிய இரட்டையர்கள்.