‘லெஜண்ட்’ சரவணன் முதல் முறையாக தயாரித்து நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரைலர், ‘மொசலோ மொசலு’ பாடல், ‘வாடிவாசல்’ பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ‘பொ பொ பொ’ பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு ‘லெஜண்ட்’ என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார் ‘லெஜண்ட்’ சரவணன்.
மலையாள விநியோக உரிமையை மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் பெற்றுள்ளார்.
தெலுங்கு உரிமையை ஸ்ரீலட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் திருப்பதி பிரசாத் பெற்றிருக்கிறார்.
கன்னட மொழி உரிமையை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் செந்தில் பெற்றுள்ளார்.
இந்தி விநியோக உரிமையை கணேஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நம்பிராஜன் பெற்றுள்ளார்.
வெளிநாட்டு உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் சஞ்சய் ‘வாத்வா பெற்றுள்ளார்.