தொடரும் அரபிக்குத்து சாதனை

விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் பீஸ்ட், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் படைப்புரீதியாக கடுமையாக விமர்சனத்திற்குள்ளானது
பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பு அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம்உச்சத்தில்இருந்தது இந்த படத்தின்டீசர், பாடல்கள் என பீஸ்ட் குறித்து வெளியான அனைத்தும் யூடியுபில் முந்தைய சாதனைகளை முறியடித்தது
குறிப்பாக அப்படத்தில் இருந்து முதலில் வெளியான அரபிக் குத்து பாடல் உலகளவில் ட்ரெண்டானது. தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் அப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே பீஸ்ட் திரைப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு பிறகும் அரபிக் குத்து பாடல் சாதனை படைத்திருக்கிறது யூடியூப்-ல் தளத்தில் அரபிக் குத்து வீடியோ உலகளவில் No.1 மியூசிக் வீடியோ என சாதனை படைத்திருக்கிறது