நடிப்பை நிறுத்தவேண்டாம் என பலரும் கோரிய நிலையில், ‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு மற்றொரு படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
நெஞ்சுக்கு நீதி’ படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய உதயநிதி, ”நடிப்பை நிறுத்தவேண்டாம் என பலரும் கோரிய நிலையில், ‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு மற்றொரு படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறேன். இந்தப் படத்தையும் இயக்குநர் அருண்ராஜா காமாராஜ் தான் இயக்குவார் என நம்புகிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின்போது, ‘ஏன்டா இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டோம்’ என்ற அளவிற்கு சிரிக்கக் கூடாது எனக் கூறியது மட்டுமில்லாமல், கண்ணைக்கூட சிமிட்டக் கூடாது என அருண் ராஜா மிகவும் கண்டிப்புடன் இருந்தார்.
பிறகு ‘மாமன்னன்’ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்தேன். அந்தப் படப்பிடிப்பின்போது, 50, 60 டேக் எடுத்தேன். அப்போதுதான் அருண்ராஜா அருமை புரிந்தது. நல்லபடியாக இந்தப் படத்தை செய்து கொடுத்தார் அருண். நன்றி” என்றார்.