சசிகுமார் தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் விலகி அம்பேத்குமார் என்கிற பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார். திரைக்கதையில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் ரத்தம் கொதிக்கும் நிகழ்வுகள்.அவை திரையில் மட்டுமன்று சுதந்திர இந்தியாவில்தரையிலும் நித்தம் நடக்கிறது என்பது கொடூரமான உண்மை.சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ருதிபெரியசாமி,பாத்திரத்தை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்
எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், மிகப் பொருத்தமாக நடித்து சாதீய ஆதிக்கத்தின் கொடூரமுகங்களைக் கண்முன் நிறுத்துகிறார்.
சமுத்திரக்கனி,ஜிஎம்.குமார், ஸ்டாலின்,ஞானவேல்,மாதேஷ்,மிதுன்
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை திரைக்கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு நடிகர்களை மாற்றிக் காட்டுவது மட்டுமின்றி நிகழ்வுகளையும் நிறைவாகப் பதிவு செய்திருக்கிறது.எழுதி இயக்கியிருக்கிறார் இரா.சரவணன்.
அடித்தட்டு மக்களும் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட தனித் தொகுதிகளின் நிலை என்ன? அங்கு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் நிலை என்ன? ஆகியனவற்றை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆள்வதற்குத்தான் அதிகாரம் தேவை என நினைத்தோம் இங்கு வாழ்வதற்கே அதிகாரம் தேவைப்படுகிறது என்கிற சொல்லின் கூர்மை படம் பார்ப்பவர்களின்நெஞ்சைக் குத்திக் கிழிக்கிறது.
திரைமொழியில் சில குறைகள் இருப்பினும் பேசாப் பொருளைப் பேசத்துணிந்ததற்காக இயக்குநரையும் அதை ஏற்றுக் கொண்டு அதற்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்த சசிகுமார் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.