நாடாளுமன்ற விழாவில் கெளரவிக்கப்பட்ட சஞ்சய் லால்வாணி

இந்திய நாடாளுமன்ற செயலகத்தின் 96 வதுதின கொண்டாட்டம் ஜனவரி 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நிதியாளராக  இருந்து வரும் சஞ்சய் லால் வாணியை பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு பைனான்ஸியராகவும், விநியோகஸ்தர் ஆகவும் உள்ள சஞ்சய் லால்வாணியின் சமூக பணியை பாராட்டி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

தேசத்தின் முன்னேற்றத்தில் மக்களவையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மக்களவை ( லோக்சபா ) செயலக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி 96 வது லோக்சபா செயலக தினம், சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

சமூகத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதற்காக, காந்தி மண்டேலா அறக்கட்டளையின் மூலம் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டதோடு,  குறிப்பாக விளிம்பு நிலை சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், லால் வாணியின் விரிவான பணிகள் அவருக்கு பரவலான பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.

அந்த விழாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா பேசியபோது.. லால் வாணியின் குறிப்பிடத்தக்க சமூகப் பணிகளை பாராட்டி பேசியதோடு, அதிர்ஷ்டம் குறைந்தவர்களை உயர்த்த சஞ்சய் லால் வாணியின் அர்ப்பணிப்பு, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவின் கொள்கைகளை பிரதிபலிக்கிறது. அப்படிப்பட்ட முன் முயற்சிகளால் எவ்வாறு சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு லால் வாணியின் பணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பாராட்டி பேசியுள்ளார்.