ஒரு பயண அனுபவமாக சென்னை தொடங்கி இமயமலை வரை பயணப்படும் கதையில் மனித வாழ்க்கையை புரிந்து கொள்ளும் பலபடி நிலைகளை அமைத்து படம் முடியும்போது ஒரு புதிய அனுபவத்தையும், வாழ்க்கையை நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொள்ளும் நம்பிக்கையை பார்வையாளனுக்கு கொடுக்கும் படம் நித்தம் ஒரு வானம்மனித வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தே இருக்கின்றன என்ற நிலையில் துன்பம் வரும்போது துவண்டு விடாமலும் குறைகளையே பெரிதாக நினைத்து, வாழும் வாழ்க்கையைரணமாக்கிகொள்ளாமல் இருக்கவும் வழி சொல்லும் படம் இது.அதைக் காரண காரியங்களோடு கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக்.நாயகனாக அசோக் செல்வன்.அம்மா அப்பாவுடன் கூட நெருக்கம் இல்லாமல், அலுவலக நண்பர்களுடனும் இயல்பான நட்பாக இல்லாமல் வாழும்அசோக் செல்வன் வாழ்க்கையில் எதேச்சையாக ரிது வர்மா வருகிறார்.சில உண்மைகளை அறிந்து கொள்ள அசோக் செல்வன் மேற்கொள்ளும் ஒரு பயணத்தில் வழித்துணையாக வரும் ரிது வர்மாவுடனான உறவு என்ன ஆகிறது, அசோக் பயணப்பட்டு சென்ற காரியங்களில் அவரால் எதிர்பார்த்து சென்ற உண்மைகளை அறிய முடிந்ததா..? இவற்றுக்கெல்லாம் விடை சொல்லும் கதை.அசோக் செல்வனின் நடிப்புத் திறமையை வெளிக்கொணர இதில் அவருக்கு நான்கு விதமான பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவரும் அந்தப் பாத்திரங்களை உள்வாங்கி உயிர் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.படத்தில்ஐந்து நாயகிகள் வந்தாலும் படம் முழுவதும் அசோக்செல்வனுடன் பயணப்படும் கேரக்டர் ரிது வர்மாவுக்கு. அவர் மட்டுமல்லாது ஷிவாத்மிகா ராஜசேகர் ஏற்றிருக்கும் பாத்திரமும், அதே பாத்திரத்தை இன்னொரு பகுதியில் ஷிவானி ஏற்று நடித்திருப்பதும் நெகிழ வைக்கிறது.இவர்கள் அற்புதமாக நடித்திருந்தாலும் எல்லாரையும் தன் நடிப்பால் அசர அடித்து அதகளம் செய்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஒரு குட்டி ஊர்வசி என்று சொல்லும் அளவுக்கு அப்பாவித்தனமான அந்தப் பாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார் அபர்ணா பாலமுரளிமற்ற துணைப் பாத்திரங்களில் வரும் அழகம்பெருமாள், காளி வெங்கட், மாத்யூ போன்றோரும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.இந்தப் படத்தின் சிறப்பம்சமே வித்தியாசமான திரைக்கதைதான். கற்பனைக் கதைகளை நிஜக் கதைகளாக்கி அந்த கதைகளையும் இரண்டு முறை வேறு வேறு நடிகர்களை நடிக்கச் செய்து திரைக்கதை அமைப்பில் புதிய முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரா. கார்த்திக்“எல்லோரும் ஒருநாள் சாகப் போறோம்… அதுவரை வழியில் பார்த்து “ஹாய்…” சொல்லும் ஒரு நபருக்கு பதிலுக்கு “ஹாய்…” என்று சொல்லிவிட்டு போவதில் என்ன தடை இருக்கிறது..?” என்று அவர் எழுதியிருக்கும் வசனம் மனித வாழ்வின் சிறப்பை ஒரு வரியில் முகத்தில் அறைந்து சொல்கிறதுஒளிப்பதிவாளர் விது ஐயன்னாஇமாச்சல் பகுதியைபறந்து பறந்துஎடுத்திருக்கும் காட்சிகள் அத்தனை ரம்மியம்.கோபி சுந்தரின் இசையில் பாடல்களும் தரனின் பின்னணி இசையும் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.படம் தொடக்கத்தில் மந்தமாக நகரும் திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது. இருந்தாலும் வாழ்க்கை அழகானது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் திரைக்கதை என்பதால் நெருக்கடியில் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பொது சமூகத்திற்கு இந்தப் படம் காலத்தின் தேவை என்பதுடன் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய படமாகவும் ஆகிறது.நித்தம் ஒரு வானம்-நிகழ்கால யதார்த்தம்