நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அட்வென்சர் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
Related Posts
முன்னோட்டம் எப்படி?
நாயகன் – நாயகி இடையிலான காதல் காட்சிகளுடன் தொடங்கும் ட்ரெய்லர், சில நொடிகளிலேயே சீரியஸ் பாதைக்கு மாறுகிறது. கிட்டத்தட்ட அதர்வாவின் உடல்மொழியையும், குரலையும் நினைவூட்டுகிறார் அவரது தம்பி ஆகாஷ் முரளி. ‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு அதிதி ஷங்கரின் ‘நடிப்பை’ இதில் பார்க்க முடிகிறது. வெளிநாட்டு ஸ்டன்ட் காட்சிகளும், யுவனின் இசையும் கவனம் ஈர்க்கின்றன.