துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது ‘கிங் ஆஃப் கோதா’. எதிர்மறை விமர்சனங்களால் படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து தீபாவளியையொட்டி திரைக்கு வர உள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது ஒரு வங்கி காசாளரின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை திரைக்கதையாக விவரிக்கிறது இப்படம். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின்
ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? –
“என் பேரு பாஸ்கர் குமார்.
என் சம்பளம் 6,000 ம் ரூபாய். வறுமையின் எல்லையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும்,
நான் தான் வேணும்னு என்ன கட்டிக்கிட்டா என்னுடைய சுமதி. என் மனைவி”
என்கிற அறிமுகப் படலத்துடன் திரையில் தோன்றுகிறார் துல்கர் சல்மான். சாமானியனாக வாழ்ந்து வரும் துல்கர் சல்மானை பண நெருக்கடி அழுத்துகிறது.
“பணம் இருந்தா தான் பாசம், மரியாதை” என ஓரிடத்தில் அவரது மனைவி சொல்கிறார். பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் அவர், “குடும்பத்துக்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் தப்பில்ல” என கூற, அடுத்தடுத்த காட்சிகளில் அவரிடம் தண்ணீராக பணம் புழங்குகிறது. ச அவருக்கு நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் ஆச்சரியமடைகின்றனர்.
எப்படி திடீர் எனஇம்புட்டு பணம் என்பதுதான் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. மொத்த ட்ரெய்லரும் பணத்தின் இன்றியமையா தேவையையும், அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.