கன்னட மொழியில் கடந்த 2017 ஆம்
ஆண்டு சிவராஜ்குமார் நடிப்பில்
வெளியான படம்” முஃப்டி
மிகப்பெரும்வெற்றி அடைந்து கன்னட
சினிமா பாக்ஸ்ஆபீசில் ஹிட்டடித்தது.
அந்தப் படத்தின் ரீமேக்தான் பத்துதல
படம் வெந்து தணிந்தது காடு படத்திற்கு
பின் சிலம்பரசன் தனது வழக்கமான
ஹீரோயிசம், மசாலா பாணியில்
நடித்திருக்கிறார் சிலம்பரசன்.
உடன் கவுதம் கார்த்திக், கெளதம்மேனன்,
பிரியா பவானிசங்கர், கலையரசன்,
ரெடின் கிங்ஸ்லிஆகியோர்
நடித்துள்ளனர் ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைத்துள்ள இந்தப் படத்தை
கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
மார்ச் 30 அன்று வெளியிட
திட்டமிடப்பட்டிருக்கும் பத்து தல படத்தின்
முன்னோட்டம் நேற்று மாலை
வெளியிடப்பட்டிருக்கிறது
சிலம்பரசன் ரசிகர்களால்
கொண்டாடப்பட்டு வரும் முன்னோட்டம்
என்ன சொல்ல வருகிறது
தமிழ்நாடு அரசியல் களத்தில் மணல்
குவாரியும் அதனை சார்ந்த மணல்
வியாபாரமும் பிரதானமானது
அரசியல் கட்சிகளுக்கான நிதியை வாரி
வழங்குவது இந்த தொழில்
செய்பவர்கள் தான்
அதனையும் கடந்து கனிம வளம் நிரம்பிய
மணல் கன்னியாகுமரி கடற்கரை
தொடங்கி தூத்துக்குடி வரை பரந்து
கிடக்கிறது
இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்
மதிப்புள்ள வியாபாரம் வெளிநாட்டு
நிறுவனங்களுடன் நடைபெறுவது வெளி
உலகத்திற்கு தெரியாத ஒன்று
இந்த தொழிலை தமிழ்நாட்டில் செய்து
வருவது தமிழ்நாட்டில்வைகுண்டராஜன்
மட்டுமே.
அந்த தொழிலை பின்புலமாக கொண்டு
பத்துதல படத்தின் திரைக்கதை தமிழ்
படத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டிருப்பதுடன்,
படம் முழுக்க சிலம்பரசனின்
ஹீரோயிசத்தை தூக்கிப் புடிக்கும்
வகையில் வசனங்களை வசனகர்த்தா
எழுதியிருப்பது முன்னோட்டத்தை
பார்க்கும்போது உணர முடிகிறது
கன்னியாகுமரி பின்னணியில்
ஏ.ஜி.ஆர் எனும் சரவணனாக சிலம்பரசன்
அரசியல்வாதியாக கௌதம்மேனன்,
அடியாளாக கவுதம் கார்த்திக் அரசு
அதிகாரியாக பிரியா பவானிசங்கர்
ஆகியோர் நடித்திருப்பதை
உணரமுடிகிறது
சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும்
ஹீரோக்களுக்கு சவால்விடும்வகையில்
சில வசனங்கள் இருக்கிறது
“மண்ண ஆளுகிறவனுக்குதான் எல்லை மண்ணை அள்ளுகிற எனக்கு அது இல்ல”
“நான் படியேறி மேல வந்தவன் இல்ல எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்”
“என்னால எத்தன பேரு செத்தானும் தெரியாது எத்தன பேரு வாழ்ந்தானும் தெரியாது…”
என்பது மாதிரியான பஞ்ச் வசனங்கள்
டீஸரில் இடம் பெற்றுள்ளது
சிலம்பரசனுக்கும் சமகால
ஹீரோக்களுக்களுடனான தொழில்
போட்டி இடையிலான தனி மனித
மோதலை பிரதிபலிப்பதாக, எச்சரிக்கை
விடுவது போன்று உள்ளது
சுமார் 1.37 நிமிடங்கள் திரையில்
ஓடக்கூடியஇந்த முன்னோட்டம்
சிலம்பரசனின் எதிர்மறையான
கதாநாயக பிம்பத்தை உணர்த்துகிறது
அன்பேசிவம் படத்தில் எல்லாம் சிவமயம்
என பேசிக் கொண்டே அதகளம்,
அட்டூழியம் செய்யும் நாசரை போன்று
பத்துதல படத்தில் சிலம்பரசன்
கம்பராமாயண புத்தகத்துடன்
நடந்துவரும் காட்சியும் இடம்
பெற்றுள்ளது
பத்து தல என்ன மாதிரியான படமாக
இருக்கும் என பார்வையாளனை
யோசிக்க வைக்கிறது மொத்தத்தில்
மாநாடு,வெந்து தணிந்தது காடு
படங்களில் கதை நாயகனாக
இயக்குநருக்கு கட்டுப்பட்டு நடித்த
சிலம்பரசன் “பத்துதல” படத்தில் மீண்டும்
கோடம்பாக்க ஹீரோயிசத்திற்கு
திரும்பியிருக்கிறார் என்பதை
முன்னோட்டம் உணர்த்துகிறது
Sign in