நாயகன் தமன் குமார் மற்றும் நாயகி ஸ்வேதா டோரத்தி இருவரையும் ரவுடி கூட்டம் துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு கிடக்கும் பூங்காவிற்குள் (பார்க்) நுழைகிறார்கள். அங்கு ரவுடிகளை விடவும் பெரிய ஆபத்து அவர்களை ஆட்கொள்கிறது. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னஎன்பதை சொல்வது தான் ‘பார்க்’.
’ஒரு நொடி’ என்ற திரில்லர் படத்தின் மூலம் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்ற நடிகர் தமன் குமார், இந்த படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் பார்வையாளர்களை பயமுறுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்திக்கு வழக்கமான கமர்ஷியல் நாயகியின் வேலை என்றாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, தனது நடிப்பில் பல நடிகர்களின் பாடி லாங் குவேஜ்களை
வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.கிரேன் மனோகர், ரேகா சுரேஷ், கராத்தே ராஜா, ஜெயந்தி மாலா, ரஞ்சன் குமார், ரஞ்சனா நாஞ்சியார், யோகி ராம், விஜய் கணேஷ் என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
ஹமரா.சிவி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். பாண்டியன் குப்பனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குருசூர்யாவின் படத்தொகுப்பு காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றிருக்கிறது.நகைச்சுவை மற்றும் திகில் இரண்டும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், இரண்டையும் இரண்டு பகுதிகளாக காட்டி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் இ.கே.முருகன்.
வழக்கமான திகில் கதை தான் என்றாலும், அதற்காக இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் பூங்கா என்ற களம் புதிதாகவும், அதை காட்சிப்படுத்திய விதம் மிரட்டலாகவும் இருக்கிறது.
குறைகள் சில இருந்தாலும், சிறிய விசயத்தை வைத்துக்கொண்டு காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட், திகில் என அனைத்து விசயங்களையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் இ.கே.முருகன், அனைத்து தரப்பினருக்குமான ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.