இயக்குனர் பாலாவின் முதல் படமான ‘சேது’ படத்தின் கதாநாயகன் விக்ரம், இரண்டாவது படமான ‘நந்தா’ படத்தின் கதாநாயகன் சூர்யா ஆகியோர் அந்தப் படங்களுக்குப் பிறகுதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாற்றம் கண்டனர். பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படம் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. ஆனால், அவர்கள் இருவருமே தற்போது பாலாவுடன் நல்ல உறவில் இல்லை.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படம் காரணமாக இயக்குனர் பாலாவுக்கும் விக்ரமுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடுத்து ‘வணங்கான்’ படத்தில் சூர்யா தயாரித்து, நடிக்க ஆரம்பித்து விலகினார். அந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, அருண் விஜய் நடித்துள்ளார். பாலாவிற்கு பாராட்டு விழா என்றால் விக்ரம், சூர்யா இருவரது வருகை இல்லாமல் முழுமையடையாது. கருத்து வேறுபாட்டை மறந்து அவர்கள் இருவரும் இந்த விழாவில் பங்கேற்பார்களா ? என்பதை தமிழ் திரையுலகம் எதிர்நோக்கி காத்திருக்கிறது.