பிச்சைக்காரன் – 2 படம் வியாபாரம் நிலவரம் என்ன தெரியுமா?

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்த இந்தப் படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தையும், வணிக மதிப்புள்ள நடிகராகவும் மாற்றியது தமிழக பாக்ஸ் ஆபீசில் வசூலில் விஜய்ஆண்டனி நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் அதனால் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது தமிழைப் போல் தெலுங்கிலும் படம் வெற்றிபெற்றதுஅதனால், அப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முடிவுக்கு வந்தார் விஜய் ஆண்டனி. தொடக்கத்தில் அவர் கதை திரைக்கதை வசனம் எழுதுவது வேறொருவர் இயக்குவது என்று தொடங்கிய அந்தப்படத்தை இறுதியில் அவரே இயக்குநராகவும் மாறி அந்தப்படத்தை எடுத்துள்ளார்.

இந்நிலையில், அப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஒளிபரப்பு உரிமை மட்டும் 20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுபிச்சைக்காரன் 2 படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சியும் இணைய ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனமும் பெற்றிருக்கிறது.