இயல்பாகவேஜெயம் ரவியிடம் இருக்கும் எதிர்வாதம் செய்யும்திறமை கண்டு அவரைச் சட்டம் படிக்க வைக்கிறார் அவருடைய அப்பா அச்யுத்குமார்.ஆனால்,ஜெயம் ரவியின் செயல்களால் அவரே வீட்டைவிட்டுத் துரத்துகிறார்.
பொறுப்பற்ற இளைஞன் பொறுப்பான இளைஞன் என எந்த வேடம் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்துவிடும் ஜெயம் ரவி, இந்த சட்டப் பாதுகாவலன் வேடத்தையும் சரியாகச் செய்திருக்கிறார்.விடிவி.கணேஷ் உடன் இணைந்து சிரிக்க வைக்கிறார்.அவருடைய கதா பாத்திரப்படைப்பிலேயே சில குழப்பங்க்ள் இருந்தாலும் அவர் நடிப்பில் தெளிவு இருக்கிறது.
நாயகி பிரியங்காமோகன் நன்றாக இருக்கிறார்.நன்றாக நடித்துமிருக்கிறார்.சில இடங்களில் பெரிய வரவேற்புப் பெறுகிறார்.
நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் பூமிகா,அந்த வேடத்துக்காக அளவெடுத்துத் தைத்தது போல் இருக்கிறார்.தம்பி மீதான பாசம்,குடும்பம் மீதான அக்கறை ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துகிறார்.
விடிவி,கணேஷ்,எம்.எஸ்.பாஸ்கர்,
விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவில் ஊட்டியின் பின்னணியில் அமைந்திருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மக்கா மிஷி பாடல் ஈர்க்கிறது.காதல் பாடலிலும் கவர்கிறார்.பின்னணி இசை கொஞ்சம் கூடுதலாகவே அமைந்துவிட்டது.
ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.படத்தைன் சுவாரஸ்யத்தைக் கூட்டத் தவறியிருக்கிறார்.கலை இயக்குநர் ஆர்.கிஷோர் உழைப்பில் அரங்குகள் நன்றாக அமைந்திருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் எம்.ராஜேஷ்,ஆழமான அடித்தளத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அதன்மேல் எழுப்பப்பட்ட கட்டிடம் பலவீனமாக இருக்கிறது.நகைச்சுவையாகவே கொண்டு செல்வதா உணர்வுப்பூர்வமாகக் கொண்டு செல்வதா என்கிற குழப்பத்திலேயே திரைக்கதை எழுதியிருக்கிறார்.அது படத்திலும் எதிரொலிக்கிறது.