இயக்குநர்நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்துக்கு ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை புரொமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ், அட்லீ, வரிசையில் அடுத்ததாக தயாரிப்பாளராக மாறியுள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், “சுவாரஸ்யமான கதைகளை தயாரிப்பதே நோக்கம்” என தெரிவித்துள்ளார்.அந்த வகையில் தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். பிளடி பெக்கர் (Bloody Beggarஎன தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார்.