இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த ‘
அனிமல்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்தி நடிகை திரிப்திடிம்ரி புஷ்பா தி ரைஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்பட்டது. சுமார் 400 கோடி ரூபாய் மொத்தவசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்குஇந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காரணமாகும்இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது படத்தின் இரண்டாவது பாடலான ‘சூசெகி’ வருகிற 29-ந்தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் ‘ஊ சொல்றியா’ பாடலுக்காக சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார். அதே போன்று
இப்போது, இரண்டாம் பாகத்தில் திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது