இவர்கள் அனைவரும் சேர்ந்து
நாயகன் காளிதாஸ் ஜெயராமுக்கு நல்ல வேடம். அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார், சிறிதுகூட எதிர்மறை எண்ணம் இல்லாத அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு அழகு மற்றும் ஆச்சரியம்.
தான்யா ரவிச்சந்திரனுக்கு வரும் அதீத கோபம்தான் நோயே. அதன் நதிமூலம் பழையதுதான் என்றாலும் இன்றும் தொடர்வதுதான். அவருடைய கோபத்தை மூலதனமாகக் கொண்டுஆண்வர்க்கத்தின்
ரேணுகாவின் கதாபாத்திரம் கொடுமையானது, ஆனால் அதையும் இரசித்துப் பார்க்கும்படி வடிவமைத்ததும்
கெளரி கிஷனின் சிக்கல் கொடூரமானது, இதுபோல் யாருக்கும் எப்போதும் நேர்ந்துவிடக்கூடாது என்று எண்ண வைக்கிற சிக்கல்.அதையும் புன்னகையோடு அவர் சொல்லுகிற நேரமெல்லாம் கண்கள் குளமாகின்றன.
நிர்மல் பாலாழியின் பாத்திரமும் ஏற்றுகொள்ளவியலாதது. ஆனால் அதில் அவருடைய வசன உச்சரிப்புகளும் உடல்மொழியும் நம்மைச்சிரிக்கவைத்துக்
கருணாகரன் கதாபாத்திரம் வித்தியாசமானது. அன்றாட வாழ்வின் எந்தச் சிக்கலும் இல்லாத அவருக்கு எல்லாமே சிக்கல்தான். நேர்த்தியான நடிப்பின் மூலம் எல்லோரும் வெறுக்க வேண்டிய கதாபாத்திரத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.
தொடரின் ஆதாரமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் நாயகனின் அப்பா நாகிநீடு.அவரை வைத்து அன்பு அறம் ஆகியனவற்றை அழகாகப் போதித்திருக்கிறார்கள். அது பார்க்கும்போது தெரியாது பார்த்து முடித்தவுடன் உணரக்கூடியது.
காளிவெங்கட், சின்னிஜெயந்த்,ஜிஎம்,குமார்,
தொடரின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் பார்வையில் நாம் பார்த்த திருநெல்வேலி, மார்த்தாண்டம், காரைக்குடி மட்டுமின்றி சென்னை கூடப் புதிதாகத் தெரிகின்றது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.
சைமன் கே கிங், தரன்குமார், வேத்சங்கர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். சித்ஸ்ரீராமின் பாடல் உருகவைக்கிறது. ரம்யாநம்பீசன் பாடல் இரசனை. சுந்தரி என்றாலும் பெண் என்றாலும் ஒன்றுதானே.அப்புறம் எப்படி சுந்தரிப் பெண்ணே?
லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு தொடரை மிக இலகுவாக நகர்த்திச் சென்று கோண்டேயிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும்
ஒவ்வொருவர் சிக்கலையும் களைந்து கொண்டே வரும்போது உயர்ந்து கொண்டேயிருக்கிறார்.
கருணாகரன் வேடத்தை வைத்துக் கொண்டு மிக ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். ஆனால் எளிமையாக விளக்கியிருக்கிறார்.
நான் உங்கள்மேல் மழையாய்ப் பொழிவேன் என்று ரேணுகா சொல்வதும் அதுவே இறுதிக்காட்சியாக இருப்பதும் சிலிர்ப்பு.பேப்பர் ராக்கெட் என்கிற பெயர் மட்டும்தான் அந்நியம். ஆனால் தொடர் முழுக்க அன்பு பாசம் காதல் ஆகியனவற்றை நிறைத்து நம்மைப் பல இடங்களில் அழவைத்து மனதுக்கு நெருக்கமாகியிருக்கிறார்