ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் சூன் 29 அன்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தேவர் மகன் படம் பற்றி பேசியது ஊடகம், மற்றும் சமூக வலைதளங்களில் ஆதரவு, எதிர்ப்பு என விவாதங்கள் ஏற்பட காரணமானது. இருந்தபோதிலும் படம் வெளியான முதல் நாள் தமிழ்நாட்டில் எட்டு கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 6.5 கோடியும் மூன்றாம் நாள் எட்டு கோடி ரூபாய் என மூன்று நாட்களில் சுமார் 22.50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது மாமன்னன் திரைப்படம்.உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த படங்களில் குறுகிய நாட்களில் அதிகபட்ச வசூல் செய்த படம் மாமன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கொண்டாடும் வகையில்ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பரிசாக மினி கூப்பர் காரை வழங்கியுள்ளது.நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் இருந்தனர்.
Prev Post
Next Post