மாவீரன் மகுடம் சூடியதா முதல் நாள் வசூல் என்ன?

மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மடோன் அஷ்வின். யோகி பாபு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த மண்டேலா படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றதுடன் ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கும் இந்திய திரைப்படங்களின் தேர்விலும் இந்த படம் போட்டிபோட்டது

மண்டேலா படத்தைதொடர்ந்து சிவகார்த்திகேயன், அதிதிஷங்கர், யோகிபாபு, மிஷ்கின், சரிதா, தெலுங்கு சுனில் ஆகியோர் நடித்துள்ள மாவீரன் படத்தை மாடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்

மாவீரன் படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சூப்பர் ஹீரோ – பேண்டசி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு பார்வையாளர்கள்,ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில், ஆதரவான, எதிர்மறையான விமர்சனங்கள்கிடைத்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மாவீரன் படம் வெளியகி உள்ளது. ரிலீஸான அனைத்து இடங்களிலும் எதிர்பார்த்த பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவிக்கவில்லை என்றாலும் மோசமான வசூலை எதிர்கொள்ளவில்லை. போர் தொழில், மாமன்னன் ஆகிய இரண்டு படங்களும் கடந்த இரு மாதங்களில் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சாதனைகளை நிகழ்த்தியதுடன், தற்போது அந்தப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் திரைக்களில் 50% பார்வையாளர்களுக்கு மேலாக படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் மாவீரன் படம் தமிழ்நாட்டில் அதிகமான திரைகளில் நேற்று வெளியானது. முன்னணி நடிகர்கன் நடித்த படங்களுக்கு வழக்கமாக இருக்கும் ஆர்பாட்டங்கள் இல்லாமல் மாவீரன் வெளியானது. முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை என்பதுடன் அரங்கம் நிறைந்த காட்சிகள் என்பது குறைவான திரைகளில் மட்டுமே இருந்தது படத்தின் வசூல், படம் பற்றி திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களின் மனநிலை பற்றி திரையரங்க வட்டாரத்தில் விசாரித்த போது

வயது வித்தியாசமின்றி பார்வையாளர்களை வசிகரிக்கும் நடிகர்களில் ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரை குறிப்பிடலாம். மாவீரன் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், விஜய் சேதுபதி இப்படத்திற்கு குரல் கொடுத்திருந்தது அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அதனால் மாவீரன் படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை என்றாலும் பார்வையாளர்கள் படத்தை மோசம் என்று கூறவில்லை. குடும்பத்துடன் கூச்சமில்லாமல் பார்க்ககூடிய படமாக மாவீரன் உள்ளது அதனால் வசூல் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது முதல் நாள் தமிழ்நாடு முழுவதும் மாவீரன் சுமார் 6.50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது