பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம்டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’. இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் மோகன் மற்றும் கோனேஸ்வரன் இசையமைத்துள்ளனர்.