கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள்எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான “ஒரு நொடி” திரைப்படம் இந்த வருடம் வெளியான படங்களில் சிறப்பான திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்றது. ஒரு நொடி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படக்குழு மற்றொரு புதிய படத்தில் இணைந்துள்ளது.
அமோகம் பிக்சர்ஸ் சார்பில்
கே. சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி. ரத்திஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 1” என தலைப்பிடப்பட்டு உள்ளது.
ஒரு நொடி படத்தை இயக்கிய
Related Posts
பி. மணிவர்மன் இயக்கும் இந்த படத்தில் தமன் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் படக்குழு மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். தமன் குமார் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் மால்வி மல்ஹொத்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மைத்ரேயா, ரக்ஷா செரின் இணைந்து நடிக்கின்றனர். அருன் கார்த்தி, காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, யாசர், சிவம், பேபி சஃபா, நக்கலைட்ஸ் நிவேதிதா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ஜி. ரத்திஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கும் இந்த படத்திற்கு சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் புரொடக்ஷன் டிசைனராக எஸ்.ஜெ. ராம் பணியாற்றுகிறார். மிராகில் மைக்கேல் இப்படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை
சினேகன் எழுதுகிறார்.
“ஒரு நொடி” படத்தில் நடித்த ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவை சேர்ந்த அனைவரும் இதில் பணியாற்றுவது இந்த படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.