மூன்றாம் பாலினத்தவர் நடித்து இயக்கியுள்ள நீல நிறச் சூரியன்

தமிழ் சினிமாவின் முதல் மூன்றாம் பாலின இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் ‘நீல நிறச் சூரியன்’. பர்ஸ்ட் காப்பி புரொடக்‌ஷன் சார்பில் மாலா மணியன் தயாரித்துள்ள இதில் கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் நடித்துள்ளனர். ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

 அக்டோபர்4 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி சம்யுக்தா விஜயன் கூறும்போது, “ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களைப் பார்க்கிறது ? அதைக் கடந்து அவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பதை எந்தவித நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன். அதுதான் இந்தப் படம். பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பாராட்டுகளைப் பெற்றுள்ளது” என்றார்.