ரஜினிகாந்த் சில மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தல்?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 30 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ‘ஸ்டென்ட்’ வைக்கப்பட்டு அக்டோபர் 3 ஆம் தேதி இரவு வீடு திரும்பினார்.
இதனிடையே, அவர் சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

சண்டைக் காட்சிகளிலோ, நடனக் காட்சிகளிலோ அவர் நடிக்கக் கூடாது என்றும் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ‘கூலி’ படம் முழுமையான ஆக்க்ஷன் படம் என்று சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றபடி ஆக்க்ஷன்காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.