ரத்தம் தெறிக்கும்’மெட்ராஸ்காரன்’ ட்ரெய்லர் எப்படி?

மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகம் ஆகும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதில் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கலையரசன், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரித்துள்ளார். சாம் சி. எஸ். இசை அமைத்துள்ளார். இப்படம் 2025ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் ஒருவரிக் கதை. ரங்கோலி படப்புகழ், இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாகப் எழுதியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
ட்ரெய்லர் முழுக்கவே ஆக்‌ஷன், குருதி தெறிக்கும் வன்முறை, ஈகோ துரத்தல்கள் என பரபரக்கிறது. படத்தின் தன்மை எப்படி இருக்கப் போகிறது என்பதை ட்ரெய்லரிலேயே யூகிக்க முடிகிறது.
கலையரசனுக்கும், ஷேனுக்கு இடையிலான ஈகோ விளையாட்டுதான் மொத்தம் படமும் என்பதை யூகிக்க முடிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘காதல் சடுகுடு’ பாட்டின் ரீமிக்ஸ் வரும் இடத்தை தவிர முழு ட்ரெய்லரும் ‘டார்க்’ ஆகவே நகர்கிறது. கோபம், ஈகோ, அடிதடி, ஆக்‌ஷன், எமோஷன் உள்ளிட்ட அம்சங்களை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. சாம் சி.எஸ்சின்  பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.