“ராமம் ராகவம்” டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ்  இயக்குகிறார்.
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து  நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் நானி வெளியிட்டார்.  உடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
பிப்ரவரி 21 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.