ரெண்டகம் – விமர்சனம்

ஆகஸ்ட் சினிமா சார்பில்சினிஹோலிக்ஸ் தயாரித்திருக்கும் ரெண்டகம் படத்தைபெல்லினி இயக்கியுள்ளார்,காஷிப் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில்அரவிந்த்சாமி, மலையள நடிகர் குஞ்சாக்கோ போபன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்தமிழில் ‘ரெண்டகம்’ என்று நேற்று தமிழ்நாட்டில் வெளியான இப்படம், மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற படமாக செப்டம்பர் 8ம் தேதியே வெளியானது. பெல்லினி இயக்கியுள்ள இந்தப் படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் படம்தான். இருந்தாலும் அதை அவர் திரைக்கதை அமைத்துக் கொடுத்துள்ள விதம்தான் சுவாரசியமானது.பால் குடித்த வீட்டுக்கு பாதகம் செய்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை வேலையில்லாமல் சுற்றித் திரியும் கிச்சுவுக்குதனது காதலி கல்யாணியுடன் சேர்ந்து இந்தியாவை  விட்டு வெளியேறி நார்வே சென்று நிரந்தரமாக தங்கிவிட வேண்டும் என ஆசை. தன் கனவை நிறைவேற்ற போதிய பணமில்லாமல் தவிக்கும் அவரிடம் ஒரு விபத்தில் சிக்கி எல்லாவற்றையும் மறந்துபோனதாவூத் என்பவரிடம் பழகி நட்பாகி அவரின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்கிற வேலையை கொடுக்கிறது ஒரு மர்ம கும்பல்பணத்தேவைக்காக அந்த வேலையை,ஒப்புக்கொண்டு தாவூத்துடன் பழக ஆரம்பிக்கும் கிச்சு, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக முடித்தாரா, தாவூத்துக்கு நினைவு திரும்பியதா என்பதோடு மட்டுமல்லாமல், அந்த வேலையை செய்கிறபோது அவர் வாழ்க்கையில் நிகழும் திருப்பங்களின் தொகுப்புதான்ரெண்டகம்படம் மலையாளத்தில் பல படங்களில் முத்திரை பதித்த குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்திருக்கும் முதல் தமிழ்ப் படம்மும்பையில் பெரிய தாதாவாக இருந்தவரின் வலது கரமாக செயல்பட்டவர் அரவிந்த்சாமி. தங்கக் கடத்தல் ஒன்று நடந்த போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது நினைவுகளை இழந்தவர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கத்தைப் பற்றிய தகவல்களை அவரிடமிருந்து எப்படியாவது பெற வேண்டும் என பயணிக்கின்ற திரைக்கதை என்று படம் பார்ப்பவர்களை அதிரவைக்கிறது அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்நரைத்த முடி, தோற்றத்துக்குபொருத்தமில்லாத ஜிப்பாவுடன்மலையாள ஸ்டைலில் வேட்டியைகட்டிக்கொண்டுநினைவுகளை இழந்த கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்தவராக அரவிந்த்சாமி. அமைதியாக, சாந்தமாக, அப்பாவியாக படத்தில் அறிமுகமாகிறார். அதிர்ந்து கூட பேசாமல் இருக்கிறார். அவர் மீது நமக்கும் அனுதாபம் வரும் அளவிற்கு நடிக்கிறார். கடைசியில் அவர் யார் என்று தெரிய வரும் போதும், அதன்பின் அவருடைய நடவடிக்கைகளும் படம் பார்க்கும் பார்வையாளர்களை அதிரவைக்கிறதுவரிசைப்படி பாகங்களாக படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் இந்திய சினிமாவில் படத்தின் முந்தைய கதையையும் சொல்லாமல், பிந்தைய கதையையும் சொல்லாமல் மூன்று பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தில், கதையின் நடுப் பகுதியே ரெண்டகம் திரைப்படமாகதற்போது வெளி வந்துள்ளது. இந்த கதைக்கு முற்பட்ட காலத்தில் நடக்கும் கதையும்,தற்போதைய காலகட்டத்திற்கான தொடர்ச்சியும் அடுத்தடுத்த பாகங்களாக இனிமேல்தான்எடுக்கபோகிறார்களாம்நடுப்பகுதி என்றாலும் அதனையும் படம் பார்க்கும் பார்வையாளனுக்கு தனிப்படமாக ரசிக்ககூடிய அனுபவத்தை கொடுக்கிறது ரெண்டகம் பாசஞ்சர் ரயில் வேகத்தில்மெதுவாக நகரும் படம் இடைவேளைக்கு பின் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்வேகத்தில் நகர்கிறது  இறுதிக் காட்சியை நெருங்கும்போது, படம் மொத்தமாக பல்வேறு திருப்பங்களுடன் பயணிப்பது படத்தின் தரத்தை உயர்த்துகிறது. சண்டைக்காட்சிகளுக்கு ஏ.ஹெச்.காஷீஃப்பின் பின்னணி இசை தனது முழு திறனையும் வழங்கி படத்திற்குவலுசேர்க்கிறதுகிரியேட்டிவ் ஷாட்ஸ், கோவா – மங்களூர் சாலைப்பயணம் ஹைவே ஷாட்ஸ், சண்டைக்காட்சிகள் என கௌதம் ஷங்கரின் கேமரா நம்மை ஏமாற்றவில்லை படத்தை நீட்டி முழங்காமல் கதைக்கு என்ன தேவையோ அதனை சமரசமின்றிகச்சிதமாக வெட்டி தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அப்பு