லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

  1. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார்நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை கடந்துஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளில் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிக்ககூடியவர்இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்
இந்தப் படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, அபிராமி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பதாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், இளையராஜா

என் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். என்ன ஒரு அனுபவம். என் படத்துக்கு அவர் பின்னணி இசை அமைப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.