நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் ‘லத்தி’. இதன் இறுதிக்கட்டபடப்பிடிப்பு
சென்னையில் நடந்து வருகிறது.
ஏற்கெனவே, இப்படத்தில் இடம் பெறும் இறுதிக்கட்ட 20 நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பை ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் நடத்தியுள்ளார்பாழடைந்த கட்டிடத்தில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு கையில் விபத்து ஏற்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு ரத்தானது. பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்படத்தில் மீண்டும் ஒரு ஸ்டண்ட் காட்சிக்காக சென்னையில் இப்பொழுது கடந்த சில நாட்களாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்
இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்ற நிலையில், கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷால் திடீரென அதிர்ச்சியாகிறார். 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தி தாக்க ஆரம்பிக்க, தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து தாக்கி கொண்டு கைதியை பிடித்து செல்வது போன்ற காட்சி. இந்தக் காட்சியில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்குவது போன்ற காட்சியில் விஷால் நடித்தபோதுஎதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்திருக்கிறார் நடிகர் விஷால். உடனடியாகஅவருக்கு முதல் உதவி எயிட்சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது விஷாலை பரிசோதித்த மருத்துவர்எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றும் பிசியோதெரபி செய்தால் போதும் என்று அறிவுறுத்தியுள்ளார் விஷாலுக்கு அடிபட்ட காரணத்தால் நேற்று மாலை முதல் லத்தி படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது
.