கொலைக் குற்றவாளி என ஒருவரை சந்தேகித்து பின் தொடரும் காவல் துறைக்கு பல்வேறு அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தெரிய வருகின்றது அதுவே லாரா திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
அறிமுகங்கள் இல்லாத, பிரபலமில்லாத நடிகர் நடிகைககள் நடித்திருந்த போதும் கிரைம் திரில்லர் திரைக்கதை நம்மை எழுவிடாமல் படத்தை தொடர்ந்து பார்க்க வைக்கிறது.
காரைக்கால் கடற்கரையில்ஒரு பெண்ணின் உடல் கரை ஒதுங்குகிறதுமுகம் தெரியாமல் சிதைக்கப்பட்ட உடல் அது.
லாரன்ஸ் என்பவன் தனது மனைவி ஸ்டெல்லாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறான் .அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
Related Posts
என்று அடிக்கடி வந்து குறைப்பட்டுக் கொள்கிறான்.இந்நிலையில்தான் கரை ஒதுங்கிய அந்த சடலத்தைலாரன்ஸிடம் அது உன் மனைவியா என்று அடையாளம் காட்ட சொல்கிறது போலீஸ் .அதைப் பார்த்த லாரன்ஸ் தனது மனைவி அதுவல்ல என்கிறான்.
தன் மனைவியை அவனே கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறான் என்று ஒரு மர்மத் தொலைபேசி காவல் நிலையத்திற்கு வருகிறது.
லாரன்ஸைச் சந்தேகித்த போலீஸ் அவனுக்குள் ஏதோ ரகசியம் ஒளிந்து இருப்பதாக போலீஸ் சந்தேக படுகிறது.ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
போலீஸ் விசாரணையின்போது அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விசாரணையை வெவ்வேறு திசைகளுக்கு இட்டுச் செல்கிறது.