இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
Related Posts
இந்தநிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 18-ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதே சமயம் வருகிற 10-ம் தேதி இயக்குனர் பாலா திரை துறையில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவடைய இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக ‘பாலா 25’ விழாவையும் வருகிற 18-ந் தேதியில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.