வாடிவாசல் படம் உறுதியானது …

கலைப்புலிதாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2021 ஆம் ஆண்டுஜுலை 16 ஆம் தேதியன்று வெளியானது. 

அதன்பின் அப்படத்திற்கான ‘டெஸ்ட் ஷுட்’ 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற போது சில தகவல்கள் வெளியானது.
வாடிவாசல்படத்திற்காக சூர்யா,  ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து அதனுடன் பயிற்சி பெற்று வந்தார். அந்த ஆண்டே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது.
 வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தை இயக்கப் போய்விட்டார். ஒரு கட்டத்தில் ‘வாடிவாசல்’ படம் ஆரம்பமாகுமா என்ற சந்தேகமும், கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு இயக்குநர்வெற்றிமாறன், கதாநாயகன் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க ‘வாடிசவாசல்’ திறக்கிறது,” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘வாடிவாசல்’ மீண்டும் திறக்கப்படுகிறது. மீண்டும் இது மூடப்படாது என்று நம்புவோமாக.”