சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று(28.12.2023) காலை 6.10 மணிக்கு காலமான தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். இதனை தனது எக்ஸ் தள பதிவில் அவர் பதிவிட்டுள்ளார்.
“ஒரு எளிமையான, யதார்த்தமான, தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால், ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்…
என் தந்தை கேன்ஸரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி ஆஸ்பத்திரியில் மிகவும் சிரமப்பட்ட போது, வாசலில் இருந்த பிள்ளையார் கோவிலில் வேண்டிக்கொண்டேன்.
மரியாதை மிகுந்தவரின் பிரிவு தரும் துயரத்தை விட, அவரது உள்ளத்தின் உயர்வு ஒரு பாடமும் கற்றுத் தருகிறது. வேதனைத் தீர எழுதிக் கொண்டே போகலாம்…. எதுவும் ஓரிடத்தில் முடியும் அது எவ்வாறு சிறப்பாக முடிகிறது என்பதே முக்கியம். அவரைப்போல சிறந்த மனிதனாக வாழ்வதே அவருக்கான நெஞ்சார்ந்த அஞ்சலி!” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.