விஜய்க்கு போட்டியாளராக மாறிய பிரசாந்த்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்படிப்பு சென்னையில் நடந்துவருகிறது.

பொங்கலுக்கு ஒருநாள் மட்டும் விடுமுறை விட்டுவிட்டு அடுத்தநாளே படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்களாம்.

இப்படத்தின் முதல்பார்வை மற்றும் இரண்டாம்பார்வைகளில் விஜய் மட்டுமே இடம்பிடித்திருந்தார்.

அண்மையில் வெளியான மூன்றாம்பார்வையில் விஜய்யுடன் பிரசாந்த, பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் இருக்கின்றனர்.

புகைப்படத்தில் மட்டுமின்றி படத்தில் இடம்பெறும் தொடக்கப்பாடலிலும் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் ஆடுகின்றனராம்.

அப்பாடலுக்கு நடன அமைப்பு பிரபுதேவாதான்.விஜய்க்கு பிரபுதேவா நடனம் அமைத்த பாடல்களும் அவற்றின் நடனங்களும் பெரும் வரவேற்புப் பெற்றவை.எனவே இப்போது இந்தப்பாடலுக்கும் எதிர்பார்ப்பு.

இப்பாடலின் படப்பிடிப்பு நடந்தபோது அனைவரும் ஆச்சரியப்படும்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன.

அவற்றிலொன்று பிரசாந்த் ஆடிய நடனம் என்கிறார்கள்.

விஜய் நன்றாக நடனமாடுவார் என்பது எல்லோரும் அறிந்தது. பிரபுதேவாதான் நடன இயக்குநர். இவர்களுடன் சேர்ந்து ஆடும்போது பிரசாந்த் கொஞ்சம் குறைவாகத் தெரிவார் என்று பலரும் எண்ணுவார்கள்.

அவற்றை முற்றிலும் பொய்யாக்கி விஜய், பிரபுதேவா ஆகிய இருவரைக் காட்டிலும் வேகமாக நடனமாடி அரங்கிலிருந்தோரை வியக்க வைத்துவிட்டாராம் பிரசாந்த்.

பிரசாந்த்தும் நல்ல நடனக்காரர்தாம் என்றாலும் அவருடைய திரைப்பயணத்தில் இடைவெளி மற்றும் முன்பைவிட கொஞ்சம் எடை கூடியிருக்கிறார் என்பதால் அவர் விஜய்க்கு இணையாக நடனமாடுவாரா? என்கிற ஐயம் இருந்திருக்கிறது.

அப்படி நினைத்தோரின் எண்ணத்தைச் சுக்குநூறாக்கிவிட்டார் பிரசாந்த் என படக்குழுவினர் சொல்கிறார்கள்.